மேனியெழில் மென்மைதனில் மேலைத் தென்றல் மெல்ல வீசிட

மேனியெழில்மென் மைதனில்மேலைத் தென்றல்மெல்ல வீசிட
வானிலவொளியும் மேனியெழில்தனில் வண்ணவொளியை போர்த்திட
மானின்விழிகளைத் தோற்றிடச்செய்திடும் பூங்குளிர்ப் பார்வையினளே
தேனிலவும்உனைப் பார்த்துநாணி முகில்பின்னே மறைந்ததடி !

------கலிவிருத்தம்
நாலசைச் சீர்கள் பூ நிழல் மிகுந்து வந்த பாவினம்

மேனியெழில் மென்மைதனில் மேலைத்தென் றல்மெல்ல வீசிட
வானிலவொளி யும்மேனி யெழில்தனில் வண்ணவொளி போர்த்திட
மானின்விழி களைத்தோற் றிடச்செய்திடும் பூங்குளிர்ப்பார் வையினளே
தேனிலவும் உனைப்பார்த்து நாணிமுகில் பின்னே மறைந்ததடி !

----அதே பாவினம் மூன்றசைசீர்கள் மிகுந்து வந்த ஐஞ்சீரில் அமைந்த கலித்துறையாக

எழுதியவர் : கவின் சாரலன் (19-Nov-21, 3:36 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 67

மேலே