முகத்தை மூடக் காதலேது

பாரதியின் கண்ணம்மா என் காதலி --- 5

தில்லி துருக்கர் செய்த வழக்கமடீ -- பெண்ணை
திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்
வல்லியிடை யினையும் ஓங்கி முன்னிற்கும் -- இந்த
மார்பை மூடுவது சாத்திரங் கண்டாய்
வல்லி யிடையினையும் மார்பிரண்டையும் -- துணி
மறைத்தத னாலழகு மறைந்த தில்லை
சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை-- முகச்
சோதி மறைத்துமொரு காதலிங்குண்டோ


ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென்கிறாய்-- பண்டை
ஆரியப் பெண்களுக் குத் திரைக ளுண்டோ
ஓரிரு முறைகண்டு பழகிய பின் -- வெறும்
ஒப்புக்குக் காடுவதிந் நாண மென்னடீ
யாரிருந் தென்னை யிங்கு தடுத்திடுவார் -- வலு
வாக முகத்திரையை யகற்றி விட்டால்
காரிய மில்லை வீண்பசப்பிலே -- கனி
கணடவன் தோலுரிக்கக் காத்திருப்பேனோ

எழுதியவர் : பழனி ராஜன் (19-Nov-21, 9:22 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 60

மேலே