பனிமலர் மங்கை
நீளும் ராவில்
நீலவானில்
காரிருள் கண்சிமிட்ட...
விரைந்தோடும்
ஆர்கலி மஞ்சுகள்...
இருளில் விழியிடற...
ஒன்றோடொன்று உரசி
இடியாய் முழங்கி
அருவியாய் மண்மீது வீழ...
கடுங் குளிர்
கதவினை
மோதி சாட...
போர்வைக்குள்
நுழைந்து
உயிர் கோர்க்கிறாள்...
மழையில்
மருவிய
பனி மலர் மங்கை..!

