பயணம்
தன்னை அறிதல் என்பது என்ன?
தன்னை அறிந்தால் என்ன கிடைக்கும்?
ஏதாவது கிடைக்கும் என்றால்,
தன்னை அறிந்தவர் எங்கும் இருப்பரே..
தன்னை அறிதல் உலகின் பொருட்டா?
புகழை அடையும் ஆசையின் பொருட்டா?
ஆசையை விட்டொழி என்றனர் பெரியோர்
தனை அறிய விழைவதும் ஆசை தானே?
பற்பல முனிகள், பெரியோர், தவசிகள் எல்லாம்
முயன்று பார்த்த ஆட்டம் தானே.
என்னை நான் ஏன் உணர்ந்திட வேண்டும்
எனக்கு மட்டும் ஏன் இந்த கேள்வி..
நண்பர்கள், சுற்றம் மற்றவரெல்லாம்
எள்ளி நகைத்தனர்,
அடுத்த களவு சாமியார் என்றனர்..
தன்னுள் புகுந்து ரமணன் அறிந்ததும்,
அண்ணாமலையா என்று அமர்ந்ததும்,
சாவை வாழ்ந்து உணர்ந்ததும்,
தன்னை அறிந்ததின் அனுபவம் தானே?
அவர் அவர் அனுபவம் அவரவருக்கு
மற்றவருக்கு முழுதும் மொழிந்திட இயலா ,
தேடும் வழியும், மொழியும், தேவைக்கேற்ப
அருள் அமைத்து அளிக்கும்.
குழப்பமுற்றேன் குருவை நினைந்தேன்
புருவ மத்தியில் நினைவை நிறுத்தி
குருவை அழைத்தேன், அருளிட பணித்தேன்
நினைவுகள் அலையில் குருவை மறந்தேன்
பயணம் தொடரும்...