அழகுக் கவிதை
அறுசீர் விருத்தம்
அழகைப் பார்த்து வர்ணிக்கா
கவிதை நீயென சமாளிப்பன்
அழகுக் கவிதை யாப்பில்
அமைக்க கனியாய் ருசிக்கும்பார்
விழலுக் கிறைத்த நீராகும்
உரையில் கவிதை புனைதலும்தான்
பிழைகள் வரினும் யாப்பில்சொல்
பின்னை யதனைத் திருத்திடுமே
...