வரிக்குமட்டி இலை - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
பற்றுதிரப் பூச்சிகளைப் பற்பலவா மந்தத்தைச்
சுற்றுதிரப் பித்தத்தைத் தூவிடத்தை - முற்றும்
அரிக்குமட்டி யாயிலைமா தங்கருரை யன்றோ
வரிக்குமட்டி யாயிலைமா தே
- பதார்த்த குண சிந்தாமணி
இதன் இலை உதிரப்பூச்சிகள், பலவகை மந்தங்கள், இரத்த பித்தம், தலையைப் பற்றிய சர்ப்ப விஷங்கள் ஆகியவற்றை விரைவாகக் கொடுக்கும்

