போற்றுவொம்
"தாய்மையை போற்றத்தான்
வேண்டும்! சரி, எந்த தாயை ?
ஐந்தில் பொம்மையை சுமக்கும் பிஞ்சு தாயையா?
பத்தில் உடன்பிறந்தோரை சுமக்கும்,
சின்ன தாயையா?
பதினைந்தில் ஆசையை சுமக்கும்,
கன்னித் தாயையா?
இருபதில் கணவனை சுமக்கும் காதல் தாயையா ?
முப்பதில் பிள்ளையை சுமக்கும்
இளம் தாயையா ?
நாற்பதில் பேர குழந்தைகள சுமக்கும்,
முதிர் தாயையா ?
எந்த தாயை போற்றுவது?
எப்படி அவள் சுமையை
மாற்றுவது ?
குழப்பம் வேண்டாம்! அவளுக்கு
அவை சுகமான சுமைகளே.
சுமப்பது அவள் குணம்!
அதில் சுகம் காண்பதே அவள் மனம்.
ஏனென்றால்,
பெண் வேறு, தாய் வேறல்ல,
பெண்மையை தாய்மை,
தாய்மையே பெண்மை ,
பெண்மையில் தாய்மை உள்ளவரை,
தாய்மை அனைவரையும் சுமக்கும்!
தாய்மையில் பெண்மை. உள்ளவரை, பெண்மை அனைவரையும் காக்கும்! .
அத்தாய்மையை போற்றுவோம்!
பெண்மை மென்மேலும் வலிமை
காண அன்பினால் தேற்றுவோம்!
மலர்க பெண்மை! வளர்க தாய்மை!."