பாக்கள் நான்கு - பாவினங்கள் மூன்று

பாக்கள் நான்கு - பாவினங்கள் மூன்று!

வெண்பா - வெண்டாழிசை, வெண்டுறை, வெளி விருத்தம்

ஆசிரியப்பா - ஆசிரியத் தாழிசை, ஆசிரியத் துறை, ஆசிரிய விருத்தம்

கலிப்பா - கலித்தாழிசை, கலித்துறை, கலிவிருத்தம்

வஞ்சிப்பா - வஞ்சித்தாழிசை, வஞ்சித்துறை, வஞ்சிவிருத்தம்

பாக்கள் நான்கும், அவற்றுக்கான பாவினங்கள் மூன்று என்றும் மொத்தம் பன்னிரண்டுக்கும் வெவ்வேறு இலக்கணங்கள் உண்டு.

இன்னும் விரிவாகப் பார்த்தால், வெண்பாவில் இன்னும் பலவகை உண்டு; குறட்பா, சிந்தியல் வெண்பா, அளவடி வெண்பா, இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா, பஃறொடை வெண்பா, கலிவெண்பா என்றும்,

கலிவிருத்தத்தில் பலவகை சீர் ஒழுங்குடனும், இலக்கணத்துடனும் இலக்கியங்களில் உள்ளன.

கலித்துறையிலும் அப்படியே; கலித்துறை என்றும், காப்பியக் கலித்துறை என்றும், கட்டளைக் கலித்துறை என்றும் அதனதன் தக்க இலக்கணத்துடனும் இருக்கின்றன.

சீரொழுங்கும், இலக்கண வரைமுறையுமின்றி பாவினம் என்று யாரும் எழுதிட முடியாது.

நான்கடி நான்கு சீரென்றும், நான்கடி ஐந்து சீரென்றும், நான்கடி ஆறு சீரென்றும் சீரொழுங்கின்றி, எந்தவித இலக்கண வரையரையுமின்றி கலிவிருத்தம் என்றும், கலித்துறை என்றும், ஆசிரிய விருத்தம் என்றும் கூறி விட முடியாது.

தகுந்த ஆசான்களிடம் முறையாகப் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். முகநூலில் கடந்த நான்கைந்து ஆண்டுகளில்

பாவலர் பயிலரங்கம் ஆசான் பாட்டரசர் பாரதிதாசனார் அவர்கள் வழிகாட்டலிலும்,

பைந்தமிழ்ச்சோலை ஆசான் பைந்தமிழ் மாமணி பாவலர் வரதராசனார் அவர்கள் வழிகாட்டலிலும்,

அவர்கள் வைக்கும் தேர்விலும் எழுதி பலவிதமான பட்டங்கள் வழங்கி பலரையும் ஊக்குவித்தும், கௌரவப்படுத்தியும் வருகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Dec-21, 10:34 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 94

மேலே