பெண்ணின் கற்பு

இராமாயணத்தில்
பத்து தலை இராவணன்
ஒருவன் இருந்தான்
சூழ்ச்சி செய்து
சீதையை சிறை
எடுத்து சென்றான் ....!!

ஆனால்...
சீதையின் கற்புக்கு
கண்ணியம் குறையாமல்
நடந்து கொண்டான் ...!!

இந்த கலியுகத்தில்
ஆயிரம் ராவணர்கள்
நடமாடிக் கொண்டு
இருக்கிறார்கள்

அதில் சிலர் தங்களின்
பார்வையால்
பெண்களின் கற்பை
சூறையாடி
கெடுத்துவிடுகிறார்கள் ...!!

சிலர் சிறை எடுத்து சென்று
கற்பை சூறையாடி
பெண்ணையும்
அழித்து விடுகிறார்கள் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (18-Dec-21, 7:09 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 357

மேலே