கரிசுதானே

வெளி விருத்தம்

பிறந்தது முதலே கற்றது கடுகளவு - உலகிலே
சிறந்து விளங்கும் எவரும் அறிந்ததே - உலகிலே
அறிவியல் என்பதும் இதனுள் அடக்கம் - உலகிலே
அறிவிலி அடிக்கும் தம்பட்டம் எடுபடாது - உலகிலே. --- (1)

தன்னுடல் தேவையை மருந்தென ஏற்பின் - பிழைவருமோ
மென்று விழுங்கும் உணவால் உடலுக்கு - பிழைவருமோ
ஒன்றிணைந்து மனமும் உடலும் இயங்கிட - பிழைவருமோ
சென்ற இடந்தோறும் உழைக்கவே நினைத்திடின் - பிழைவருமோ --- (2)

நல்லதாய் பேசியே தீமைக்கு துணையானால் - கரிசுதானே
பொல்லா எதையும் கற்றே ஏவினால் - கரிசுதானே
இல்லா ஒன்றைக் கூறியே பயமுறுத்தல் - கரிசுதானே
கல்வியை எவருக்கும் மறுத்தல் மாபெரும் - கரிசுதானே --- (3)

உணவில் சுவையைச் சேர்த்தே உண்ணுபவன் - மனிதனே
பிணியினால் மருத்துவரை அணுகியே தெளிபவன் - மனிதனே
பணிபவரிடம் பலத்தைக் காட்டிடும் பலசாலி - மனிதனே
உணவிலே வெகுவாய் நஞ்சை கலப்பவன் - மனிதனே --- (4)

தளிர்முதல் வேர்வரையும் நீந்துதல் பறத்தலையும் - பணத்துக்காக
குளத்தையும் குன்றையும் ஆற்றையும் காற்றையும் - பணத்துக்காக
வளத்தை எல்லாம் சிதைத்து மாற்றியே - பணத்துக்காக
விளைவினை நோக்கா மனிதனை பணமழிக்கும் - பணத்துக்காக --- (5)
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (18-Dec-21, 6:49 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 73

மேலே