மனிதம் போர்த்திய மிருகம்

உறவென்று
நம்பினேன்
உடலோடு
விளையாடினான்...
நயவஞ்சகன்...

அண்ணாவென
நெருங்கினேன்
ஆசைக்கு இணங்கு
என அணைக்கிறான்...
கயவன்...

காதலென
சென்றேன்
காமமே வென்றது
அங்கும்...
காமுகன்...

பள்ளி பாடம்
பயில சென்றேன்
பள்ளியறை
பாடம் நடத்துகிறான்...
மனிதம் மரித்த மிருகம்...

காகிதமாக கசக்கி
எறிந்த பின்னும்
தடுமாறி எழுந்தவளை
குற்றம் சொல்லும்
சமூகம் இருக்கும் வரை...

சட்டங்கள்
இருந்தென்ன
பயன்...

உடல் விட்டு
உயிர் நின்று
புதையுண்ட
பின்னேனும்
விட்டு வைப்பரோ
பிணம் உண்ணும்
கழுகுகள்...

யாரை குற்றம்
சொல்வது?..

காமமே வாழ்வென
எண்ணம் கொண்ட
வஞ்சகர்களையா?

விலைகொடுத்து
வாங்கப்படும்
(அ)நீதியையா?...

புறம் பேசும்
சமுகத்தையா?...


(ஒரு சில ஆண்களுக்கு)

எழுதியவர் : பிந்துஜா ராஜா (22-Dec-21, 8:08 am)
சேர்த்தது : பிந்துஜா ராஜா
பார்வை : 58

மேலே