காதலனை எங்கும் தொடவள் நாணாது அனுமதிப்பள்

நேரிசை வெண்பா

நால்வகை பெண்குணத்தில் நாணமொன்று நாலதில்
கால்கோளிட் டான்தொடயில் லைநாணம் -- வாலென்பள்
காதலன் தீண்ட நலுங்காள் குலுங்காளாம்
பேதமிலா தேயிருப்பள் பெண்

வால் ---- தூய்மை


என்னால் விரும்பப்பட்டவர் காதல் ஆசையில் நான் விரும்பியதையே செய்தபோது,
நாணம் என்று சொல்லப்படும் ஒன்றை அறியாமலேயே இருந்தேன்.

குறள் 7/18

எழுதியவர் : பழனி ராஜன் (22-Dec-21, 9:18 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 52

மேலே