கடல் தாண்டி காதலுடன்

எங்கே அவன் முகம்?
எங்கே அவன் தேகம்?
எங்கே அவன் முத்தம்?
உன்னை காண துடிக்கும் கண்களும்
உன்னை தீண்ட தேடும் கைகளும்
உன்னை முத்தமிட ஏங்கும் உதடுகளும்
மீண்டும் மீண்டும் கேட்கிறதே !!
என்ன நான் சொல்வேன்
எத்தனை நாட்கள்
இத்தனை கொடுமைகள் ..

அன்று உன் காதலியாய்
இன்று உன் மனைவியாய்
தொலைவில் இருந்தும் எதுவும் மாறாமல்
பிரிவின் ஏக்கத்தில்
காத்திருப்பின் தவிப்பில்
என்றும் உன் தோழியாய் ..

எழுதியவர் : பிரியா ஹரிஷ் (23-Dec-21, 7:06 pm)
சேர்த்தது : பிரியா ஹரிஷ்
பார்வை : 213

மேலே