செந்தில் கவுண்டர் வாழ்த்துக்கவி
அன்பு அண்ணன்
திரு செந்தில் கவுண்டர்
அவர்களுக்கு
வாழ்த்துக்கவி
உங்கள்
நெஞ்சில்
செம தில்
இருப்பதால்
நீர் செந்தில்
நீங்கள் காலாப்பட்டு
தொகுதியின் காலா
நீர்தான்
இருக்கப் போகிறாய்
முடமான காலாப்பட்டு
தொகுதியை
எழுந்து நடக்க
வைக்கப்போகும்
காலா
நீங்கள் ஈகையினை
இரு கைகளாகக் கொண்டவர்
அதனால்
சட்டமன்றத்தில்
இருக்கையினை
செய்து வைப்பார் ஆண்டவர்
நீங்கள் ஆணையிட்டால்
அது நடந்துவிட்டால்
ஏழைகள் வேதனைத் தீயில்
வேகுவாரா
சோதனை நோயில் சாகுவாரா
நீர்
ஏழைக்காக போராடப் பிறந்த
சேகுவேரா
நீங்கள்
வீரப்பனிடம் இருந்து
தெறித்த துகள்
காடுவெட்டி குருவின் நகல்
ஏழைகளுக்கு ஒளி
கொடுக்கப் பிறந்த அகல்
வன்னிய இனத்திற்கு
உங்களால்தான்
வரப்போகிறது
பகல்
உன் கைகள் கொஞ்சம்
குட்டையானது
ஏழைகள் கண்ணீர்
துடைப்பதில்
கைக்குட்டை
ஆனது
பாரி மாரி
ஓரி காரி
இவர்களுக்கு
எல்லாம் சொல்கிறேன் சாரி
ஏனென்றால்
நீங்கள் தானே கொடுத்தீர்
மாற்று திறனாளிகளுக்கு
சாரி
எடுப்பவர்
கெடுப்பவர்
மத்தியில்
நீங்கள்
மக்களுக்கு
கொடுப்பவர்
நீர்
அன்பும் தொடுக்கத்
தெரிந்தவர்
அம்பும் தோடுக்கத்
தெரிந்தவர்
நீங்கள் ஊராண்டும்
நூறாண்டும்
இப்பாராண்டும்
வாழ அன்போடு
வாழ்த்துகிறோம்