👫உனக்காகவே நானடி❣️

மொட்டுகளால் நீ மலரும்போதும்
நானும் விரிந்து மலர்கிறேனடி.........
பூக்களால் நீ மணம் வீசும்போதும்
நானும் மாறி மணக்கிறேனடி.............
பூமியாய் என்னை சுற்றும்போதும்
நானும் மெய்மறந்து சுற்றுகிறேனடி.........
மேகமாய் என்னை சுமக்கும்போதும்
தாகமாய் உன்னுள் இருப்பேனடி...........
உயிராக உன்னுள் இருக்கும்போதும்
உணர்வுடன் உனக்காகவே இருப்பேனடி..........


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (24-Dec-21, 6:11 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 415

மேலே