உங்களுக்கு தெரியுங்க இருந்தாலும் படிங்க

அதிகாலை எழுங்க, நன்றியுடன் தொழுங்க!
தனிமையில் அமருங்க, நீங்க யாருன்னு கவனிங்க!
உடற்பயிற்சி புரியுங்க, கூடவே அதை ரசிங்க!
காலை சிற்றுண்டி எடுங்க, அது அமிருதங்க!
புன்னகை புரியுங்க, ஓடிடும் பகைங்க!
கடமையை செய்யுங்க, கோபத்தை பூட்டுங்க!
உதவி ஏதேனும் செய்யுங்க, நிச்சயம் மனசு உய்யுங்க!
வயிறு விட்டு சிரிங்க, துன்பம் கண்டுக்காதுங்க!
குடும்பத்தை கவனிங்க, அவங்க உங்களை கவனிப்பாங்க!
வேளையில் சாப்பிடுங்க, சைவ உணவு அருமைங்க!
இரவில் மிதமாக சாப்பிடுங்க, கவலை விடுங்க!
டிவி, செல்லை மூடுங்க, நன்றியுடன் கும்பிடுங்க!
உலக நன்மைக்கு வேண்டி படுங்க, கண்ணை மூடுங்க!
அப்புறம் என்ன,அமைதியா தூங்கிடுவீங்க! சரிதானேங்க?

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (27-Dec-21, 11:16 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 98

மேலே