நான் ரசித்த வரணனை

நான் ரசித்த வரணனை

கண்னில் கண்ட கன்னி நீ
கனவில் வந்த கன்னி தமிழே!
காதலில் விழித்தேன் உன்னை
கண்ணில் கண்டதும் என்னில்!

மலர் போன்ற மங்கை நீயல்லவா
கயல் போன்ற விழிகள் விண்மீனை!
மேனியின் மங்கையின் அழகே
கார்மேக குழல் நின் கூந்தலாழகு!

தொல்லுதமிழ் பேசும் மணிமொழி
அன்பின் ஓளிச்சுடர் கனி ழொழியனவள்
இனியோருக்கு கற்பதும் தேன்ழொழியவள்
அறம்காத்து பொருள் தந்த முத்தமிழவள்

கற்றோருக்குப் பொருள் தந்த சான்றோருக்கு
சலங்கை பொருள் தந்தசிலப்பதிகாரம்
கவி கண்ட கம்பனின் பொண்னல்வா நீ
கவிக்கு அணிகலன் தந்த இலக்கியம் நீ

அமுதின் அமுதமாய் அகிலமும் காக்கும்
அருள் தரும் இனிய உள்ளமே பெண்ணே
இனிய உலகில் பேரழகி உண்டே!
இதயத்தில் அமர்ந்துவிட்டாய் நீ!

எங்கே பறந்து செல்கிறாய் நீ
என் விழியில் படர்ந்தாய் நீ
எளிமை உள்ளத்தில் நுழைந்தாய்
எங்கே நீ! தடவினேன் கண்திறந்து

எழுதியவர் : இராகு.அரங்க.இரவிசந்திரன் (28-Dec-21, 8:51 am)
பார்வை : 238

மேலே