வாழ்க உங்களை நன்கு ஆண்டு
பழைய ஆண்டில் முக்கியமாக என்ன நிகழ்ந்தது?
டெல்டா அண்ணன் போய் ஒம்ரிகன் தம்பி வந்தது
நீரஜ் சோப்ரா முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்றார்
ஏர் இந்தியா டாட்டா குரூப் கம்பெனிக்கு மாறியது
100 கோடி கரோனா தடுப்பூசி இங்கு போடப்பட்டது
உழவர்களின் போராட்டம் பெரிய வெற்றி பெற்றது
இதைபோல இன்னும் சில விஷயங்கள் நிகழ்ந்தது
இவை அனைத்தும் நம் நாடு தழுவிய நிகழ்ச்சிகள்
தனிமனிதனாய் என்ன முன்னேற்றம் கண்டோம்?
அன்பு இரக்கம் கருணையை சிறிது கூட்டினோமா?
வெறுப்பு கோபம் பேராசை கொஞ்சம் குறைந்ததா?
மதம் மொழி இனம் இப்பிடிகளை தளர்த்தினோமா?
எவ்வளவு ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்டினோம்?
எத்தனை நாட்கள் நாம் மனஅமைதி அடைந்தோம்?
வாழ்வில் ஏதேனும் லட்சியங்களை வைத்தோமா?
அந்த லட்சியத்தில் எத்துணை உறுதி கொண்டோம்?
எவ்வளவு விழிப்புணர்வுடன் வாழ்ந்து வருகிறோம்?
குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவு வைத்தோமா?
நெருக்கமான நண்பர்களுடன் எவ்வாறு பழகினோம்?
இதில் ஒன்று அல்லது இரண்டு கேள்விக்கு "நன்றாக"
என்பது பதிலானால் அது உயர்வான முன்னேற்றமே!
நேர்மறை பதில் இல்லை எனில் கவலை வேண்டாம்
இன்று உதித்துள்ளதே புத்தம் புதிய 2022 ஆம் ஆண்டு
இன்றிலிருந்து முன்னேற்ற பாதையை தொடருங்கள்
உங்கள் அறிவு, திறமை உழைப்பை உபயோகியுங்கள்
நல்ல தனி மனிதனாக வாழ பேராவல் கொள்ளுங்கள்
அப்போது நீங்கள் நல்ல ஒரு குடிமகனாக திகழ்வீர்கள்
அப்புறம் என்ன, அன்பு அமைதி ஆனந்தம் உங்கள் வீடு
இத்தகைய அனுபவத்திற்கு எதுவும் இல்லை ஒரு ஈடு
ஆனந்த ராம்