உண்மைக்கு உரைக்கல்

நீதிமன்றத்தில்
பொய் உரைப்போன்
சாட்சிக் கூண்டில் ஏறி
நான் சொல்வதெல்லாம்
உண்மை என்று
சத்தியம் செய்கிறான் .
அது வாடிக்கை ...!!

அதுபோல் ...
உண்மையை உரைப்பவனும்
சாட்சிக் கூண்டில் ஏறி
நான் சொல்வதெல்லாம்
உண்மை என்று சத்தியம்
செய்வதுதான் வேடிக்கை ..!!

தங்கத்தின் தன்மையை
உரைக்கல்லில் உரைத்துப்பார்த்துதான்
அறிந்துகொள்வார்கள் ..!!

அதுபோல்தான் நாட்டினில்
உண்மையின் தன்மையை
அறிவதற்கும் உரைக்கல்
தேவைப்படுகிறது ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (2-Jan-22, 9:59 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : unmaikku uraikkal
பார்வை : 436

மேலே