பிள்ளை பேறு தொல்லையாய்

நிலை மண்டில ஆசிரியப்பா -
கலிவிருத்தம்

என்ன நடந்ததோ இருபது ஆண்டுகளில்
பிள்ளைகள் பெறுவதோ அரிய நிகழ்வாய்
பிள்ளைகள் பிறப்பால் அல்லல் பட்ட
சமூகம் ஒன்றைப் பெற்றிட தவத்திலே (க)

நஞ்சென உணவதும் இயற்கையும் சிதைய
மிஞ்சிய மனிதனின் பணத்தின் பற்றும்
கொஞ்சமும் கருணை இல்லா வளர்ச்சியும்
மஞ்சத்தை செய்தது வெற்று பள்ளியாய் (உ)

பிள்ளையைக் கொடுக்கும் ஆடவர் யாவரும்
வெள்ளை வித்தில் திறனது அற்றவராய்
எள்ளின் அளவிலும் வீரியம் இல்லாததால்
கொள்ளை அடிக்கும் நிலையில் மருத்தும் (ங)

பெண்டீரும் வயதது தாண்டிய நிலையில்
பெண்மை முடியும் நிலையில் திருமணமும்
பண்பாடு இல்லாத பழக்கமும் கைவரக்
கொண்டதால் பிள்ளைகள் பேறதும் தொல்லையாய் (ச)

விளைநிலமும் வீரிய விதையும் தரமெனில்
விளைச்சல் செழிப்பாய் திடமாய் இருக்கும்
களையென சீர்க்கெட்ட பழக்கமும் கொண்டால்
இளைத்திடும் வம்சத்தின் வழிவரும் பயிர்கள். (ரு)
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (3-Jan-22, 8:48 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 38

மேலே