அயல்தேச அழகி
கொத்தும் குலையாய்
தெரியுது
கெத்துகாட்டி
திரியுது
மொட்டக் கேணி
பொந்துல
காமம் தணித்த பறவைபோல்
எச்சம் தொச்சம்
தெரிந்தும்
எதுவும் தெரியா
மழலையாய்
இளசுகள் ஏங்கும்
பதுமையாய்
பணத்தை பதுக்கும்
காலப்'பரத்தை'
பலதையும் மறந்து
பலறையும் பிரிந்து
அந்தப்புரத்து அரசியாய்
அயல்தேச அழகியாய்
ஆலமர நிலல் தேடி
கண்மாய்க்கரை
போகையில்
கொல்லநெச்சி பிள்ளையாரும்
கொழுக்கட்டை நீட்ட
கள்ளப் புன்னகையில்
கடவுளை தொழுதால்
யாதும் அறியா
மங்கை நான்
நெஞ்சில் ஈரமிருந்தும்
வாழ்வில் பரத்தையென்னும்
வடுக்கல் மறையவில்லை
பரம்பொருளே யென்று.