கடலும் கரையும்
கடலும் கரையும்
கடலுக்கும்
கரைக்கும்
எப்பொழுதும்
நம்பிக்கையற்ற
நட்பு தான்
இருவருமே
தள்ளு முள்ளுகளில்
கை தேர்ந்தவர்கள்தான்
கொஞ்சம்
ஏமாந்து இடம்
கொடுத்தாலும்
ஒன்றை ஒன்று
விழுங்கத்தான்
பார்க்கிறது
சில நேரங்களில்
கடல் தோற்பது
போல் பின் வாங்கினாலும்
சட்டென்று தன்
இடத்தை மீண்டு
வந்து பிடித்து
கொள்ளத்தான்
செய்கிறது