மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்

"மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்"
பகவான் ஸ்ரீகிருஷ்ணன் -
*"அர்ஜுனா! கேட்பாயாக!"
"மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்".
ப்³ருஹத்ஸாம ததா² ஸாம்நாம் கா³யத்ரீ ச²ந்த³ஸாமஹம் |
மாஸாநாம் மார்க³ஸீ²ர்ஷோऽஹம்ருதூநாம் குஸுமாகர: || - 10- 35||
மாஸாநாம் மார்க³ஸீ²ர்ஷ: அஹம் = மாதங்களில் நான் மார்கழி!
ஸ்ரீமத் பகவத் கீதை அத்தியாயம் - 10; ஸ்லோகம் - 35
"மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்" என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தனது கீதையில்
இம்மாதத்தை சிறப்பித்துக் கூறியிருக்கிறார்.
"உன் ஐந்து புலன்களும் நானே!
ஐந்து புலன்களின் நுகர்வும் நானே!
ஐந்து புலன்களின் காரணமும் அவற்றின் காரியங்களும் நானே!
அவை ஆற்றும் கர்மங்களும் நானே!
அந்தக் கர்மங்களுக்கான பலன்களும் நானே!
அவற்றை "உணரும்" உன் மனமும் நானே!
ஆகவே, உன் ஐந்து புலன்களையும் உன்னிடம் அடக்கிவைத்து,
உன் "பிறவிக் கர்மங்களை (கடமைகளை)" மட்டும் செய்!"
இப்போது,
மீண்டும் "மாதங்களில் நான் மார்கழி" எனும் வசனத்தை மீண்டும் பாருங்கள்!
ஐம்புலன்களையும் நன் கட்டிற்குள் வைக்க உதவும் மாதம் மார்கழி!
ஆக, பகவானையும் நம் "கட்டிற்குள்",
அதாவது மனம் எனும் கட்டிற்குள்,
பக்தியால் வைக்கும் மாதம் மார்கழி!!
மார்கழியில் நீங்கள் "பிரம்ம முகூர்த்தம்" ஆன அதிகாலை நேரதத்தில்
எழுந்தாலே நீங்கள் "அந்தக் கட்டிற்கு" முழுத் தகுதி பெற்றவர்கள் ஆகிறீர்கள்!
இப்போது பாருங்கள்!
எழுந்தாயிற்று!
கண்களில்,
அதிகாலைக் கதிரவனின் இள்ஞ்செங்கதிர்கள் படும்!
பனியில் ஊறிய காலைப் புது மலர்கள் படும்!
அவை புத்தம் புது மொட்டுக்களின் உள்ளிருந்து விரிந்து விழும் அற்புதக்காட்சி படும்!
அவற்றில் இருந்து வழியும் மதுரம் படும்!
மகரந்தம் படும்!
அவற்றின் மீது ஆர்வத்துடன் விழுந்து புரண்டு மகரந்தக் குளியல் ஆடும் தேனீக்களின் கூத்தாட்டம் படும்!
உற்சாகமாக இந்த நாளைப் பாடி வரவேற்கும் பறவைகள் படும்!
பச்சைமா மலைபோல் மேனி (இயற்கையின் மேனி) படும்!
கோயிலின் மீது உயர எழுந்து கதிரொளியில் மின்னும் கோபுரம் விழும்!
கருவறையில் எழுந்திருக்கும் இறைவனின் அருள் முகம் படும்!
பூஜைப் பொருட்கள் நிறைந்த கருவறை படும்!
பூஜைத் தீபங்கள் படும்; அவற்றின் பொன்வண்ணச் சுடர்கள் படும்!
ஓங்கி எழும் தூபப் புகை படும்!
காதுகளில்,
பனிவிழும் முணுமுணுப்பு விழும்!
மலர்கள் மெதுவாக அவிழும் சலனம் விழும்!
அவற்றின் மீது ஆர்வத்துடன் விழுந்து புரண்டு மகரந்தக் குளியல் ஆடும் தேனீக்களின் ரீங்காரம்
விழும்!
ஒவ்வொன்றாக உற்சாகக் குரலெடுத்துப் பாடிக் காலையை வரவேற்கும் பறவைகளின் பாடல்
விழும்!
கோயில்களிலிருந்து வரும் மார்கழிப் பூஜை மணியோசை விழும்!
திருப்பள்ளி எழுச்சிப் பாடல் விழும்; திருப்பாவைப் பாடல் விழும்; திருவெம்பாவைப் பாடல் விழும்!
மூக்கில்,
அதிகாலை இளமென்பனி வாடை (ஓஜோன் வாடை) படும்!
பனியில் ஊறிய பச்சிளம் மூலிகைச் செடிகளின் மருந்துமணம் படும்!
அவிழ்ந்து கொண்டிருக்கும் மலர் மொட்டுக்களின் இன்மணம் படும்!
அவற்றில் இதழ்களில் துளித்திருக்கும் மதுர மணம் படும்!
அவற்றின் மீது புரண்டாடும் தேனீக்கள் எழுப்பும் மகரந்த மணம் படும்!
கோயில்களில் இருந்து வரும் பூஜை மலர்கள், தூபங்கள், நைவேத்தியங்களின் மணம் படும்!
வாயில், நாவில்,
இறைநாமாவளி (ஓலிக்கப்) படும்!
பள்ளியெழுச்சி, பாவை, எம்பாவை பாசுரங்கள் (பாடப்) படும்!
தூய இனிய பனிநீர் படும்!
இனிய பனிமலர் மதுரம் படும்!
பனியில் ஊறிய மகரந்தம் படும்!
பூஜைத் தீர்த்தம் படும்!
திருநீறு படும்!
இறைவனுக்கு நைவேத்தியமான பிரசாதங்கள் படும்!
உங்கள் மேனியில்,
மயிலிறகுபோல் குளிருக்கு இதமாக வருடும் செவ்விளங்கதிர் படும்!
இரவின் பனியில் ஊறிய உயிர்க்காற்றுச் சக்தி (ஓஜோன்) படும்!
பனிமலர்களின் மென் மகரந்தத் தூவல் படும்!
அவிழ்ந்து விரிந்து சிரிக்கும் மலரகளின் இனிய மதுரத் துளிகள் படும்!
தேனீக்களால் உதிரும் மலர்இதழ் மழை படும்!
அப்படி உதிரும் மலர்கள், கால்களின் மெதுமெதுவென்று பதியும்!
பூஜைக்கு அணியும் திருமண்படும்; திருநீறூ படும்; சந்தனம் படும்!
சூடிக் கொள்ளும் மலர்ச் சரங்கள், மலர்மாலைகள் படும்!
தெளிக்கப் படும் பன்னீர் படும்!
கோயிலில் இருந்து வெளிவந்ததும் ஒத்தடம் போல் கதிரவனின் இளம் வெம்மை படும்!
இப்படி, நம் ஐம்புலன் களின் மீதும்,என்னென்னெ "பட வேண்டுமோ, அவை படும்!!
ஐம்புலன்களுக்கும் தேவையான அத்தனையும் கிடைக்கும்!
அத்தனையும் உங்களுக்கு வேண்டுமளவில் கிடைக்கும்!
அனைவருக்கும் கிடைக்கும்!
இத்தனைக்கும் மேலான ஒரு இறையருள் இலவசமாக இவற்றுடன் உங்களுக்குக் கிடைக்கும்!
அது,
மன அமைதி, மன நிறைவு, மனமகிழ்ச்சி, மனநலம், மனமாற்றம், மனோசக்திப் பெருக்கம்!!
இவை கிடைப்பதால் இவற்றால் *"தானாக நிகழும் உடல்நலம்!"*
இதனால்தான்,
"மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்",
என்று இறைவன் சொன்னது!
சுயம்புவாகத் தோன்றிய சர்வேஸ்வரனால் உங்களுக்குள் நிகழும் சுய மருத்துவம்!
முப்பது நாட்கால அரு மருத்துவம்!
நீங்கள் ஆயிரம் ஆயிரமாகச் செலவழித்து அரச வைத்தியம் செய்தாலும் இந்த அற்புத மருத்துவம் எப்போதும் கிடைக்காது!
ஆண்டின் மீதி முந்நூறு நாட்களுக்குமான *"உயிர்ச் சக்தி மருத்துவம்!"*
ப்³ருஹத்ஸாம ததா² ஸாம்நாம் கா³யத்ரீ ச²ந்த³ஸாமஹம் |
மாஸாநாம் மார்க³ஸீ²ர்ஷோऽஹம்ருதூநாம் குஸுமாகர: || 10- 35
மாஸாநாம் மார்க³ஸீ²ர்ஷ: அஹம் = மாதங்களில் நான் மார்கழி!
ஸ்ரீமத் பகவத் கீதை அத்தியாயம் - 10; ஸ்லோகம் - 35
(பார்வைக்காக, மேலே கீதையிம் சம்ஸ்க்ருத வடிவம் தரப்பட்டுள்ளது, உச்சரிப்பு, இந்த எழுத்து ஒலிப் பெயர்பில் துல்லியமாக இருக்காது).
----------- சந்திர மௌலீஸ்வரன் - ம கி. - "சித்திரைச் சந்திரன்.