அனுபவித்து வாழத்தான் ஆசை

அனுபவித்து வாழத்தான் ஆசை

வாழ்க்கையை
ஆடி அனுபவித்து
அசை போட்டு
செல்லத்தான் ஆசை

விடியும் முன்னே
காத்து நிற்கும்
கடலளவு சிந்தனைகள்
மலையளவு
பிரச்சினைகள்

கொஞ்சம் கொஞ்சமாய்
மலையை
தாண்டவும்
நீந்தி கரை
சேரவும்

அனறைய நாள்
அவசரமாய்
முடிந்து விடுகிறது

அனுபவிக்கவும்
அசைபோடவும்
மனிதனுக்கு
அவகாசம்தான் ஏது?

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (11-Jan-22, 1:15 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 327

மேலே