அழகோ அழகு

*அழகோ அழகு*
😘
கற்றார்க்கு அறிவு அழகு
உற்றார்க்கு உறவு அழகு
பெற்றவர்க்குப் பிள்ளை அழகு
பிள்ளைக்குப் பண்பு அழகு
😘
காளைக்குக் கொம்பு அழகு
காளையர்க்கு வீரம் அழகு
வீரர்க்குத் தோள் அழகு
விரலுக்குக் கணையாழி அழகு
😘
ஊருக்குச் சோலை அழகு
சோலைக்கு மலர் அழகு
மலருக்கு வண்டு அழகு
வண்டுக்கு இசை அழகு

தந்தைக்கு நட்பு அழகு
நட்புக்குப் பிணை அழகு
தாய்க்குச் சேய் அழகு
சேய்க்குச் சிரிப்பு அழகு. 😘

*அழகோ அழகு*

எழுதியவர் : கிருஷ்ண சதானந்த விவேகானந (11-Jan-22, 5:24 pm)
Tanglish : alago alagu
பார்வை : 80

மேலே