மார்க்கம் உண்டு

பணிக்கு தாமதமாக வரும்
பணியாளர்களிடம்
காலதாமதம் ஏனெனக் கேட்டு
கடிந்து கொள்ளாமல்,
நாளை சரியான
நேரத்திற்கு வர முயற்சியுங்கள்
என்றால் அது ஆக்கபூர்வமான
அணுகுமுறை

மெதுவடை செய்தேன்
மீந்துவிட்டதெனக் கூறி
அடுத்த வீட்டு மாமியிடம்
அதனைக் கொடுப்பதைக் காட்டிலும்
உங்களுக்கும் சேர்த்து செய்த
வடையைத் தான் எடுத்து
வந்தேன் கொடுப்பதற்கு
என்றால் சரியான அணுகுமுறை

நல்ல உள்ளமும்
இனிய பேச்சுத் திறனும்
நிறைந்திருந்தால்
நட்புகள் அதிகமாகும்
எதையும் சாதிக்க இயலும்
முயன்றால் முடியும்,
மனம் உண்டானால்
மார்க்கம் உண்டு.

எழுதியவர் : கோ. கணபதி. (11-Jan-22, 12:21 pm)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : MAARKKAM undu
பார்வை : 62

மேலே