வெண்ணெயால் செய்த பெண்

வெண்பாறையை அழகாய் செதுக்கி
வெண்ணெயை பதமாய் தடவி
எண்ணத்தை மாற்றிடும் வனப்பில்
பெண்ணொருவள் நடந்து வந்தாள்

கருமையால் கூந்தல் அழகும்
அருமையாய் அவளை சிறக்க
பொருத்தமாய் பொன்கலன் பூட்டியவள்
திருவென தெரிந்தாள் எனக்கு

தெளிவினால் பொலிந்த முகமும்
அளவிலா அழகால் உருவும்
பளபளப்பில் மனதை மயக்க
தளர்விழந்த மரமாய் வீழ்ந்தேன்

பழந்தேடும் கிளியாய் நானும்
பழுத்த பழமாய் அவளும்
இழுத்தால் அழகால் என்னை
விழித்தபடி அவளைநாடிச் சென்றேனே

முறுவல் செய்தே நின்றாள்
குறள் கூறும் பொருளாக
குறுநகை என்னை மயக்க
அறிவிலுக்கு அகன்று மயங்கினேன்
--- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (11-Jan-22, 5:54 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 545

மேலே