காகித காதல்
உன்னை நினைத்ததும்
நான்
காற்றில் பறக்கும்
காகிதமானேன் .
மனதில் தோன்றிய
எண்ணங்களை
மெல்லிய
மயக்கத்தோடு
என்
கையாலே காகிதத்தில்
ஏற்றினேன்
கரும்பாரை யானது காகிதம்
புயல்
காற்றுக்கும்
அசங்காமல் நின்றது
மனபாரம் போய் சின
பாரமானது
அது உன்னை பார்த்ததும்
எரிமலையாய்
வெடித்தது
வாடைகாற்றில்
வாடிய பூ இதழ்கள்
போல்
வதங்கி போனது உன்
முகம்
செங்கல்
சூளைக்குள் என்
சொற்களை
வைத்து சூடு பறக்க
சொல்லை வீசி
உன் பார்வை எனும்
சுழல்
காற்றுக்குள்
சுறுங்கிப் போன
பஞ்சானது
வஞ்சி உன்
பிஞ்சு விரல்கள்
பட்டது
பட்ட மரமான என்
மனதிலும்
இளந்தளிர் கண்டேன்
நான்!