மௌனம் வேண்டாம்

மௌன மொழி பேசு கண்ணே
அதை பேசிப் பேசி
உன் உதடும்
உள்ளமும்
சத்தமில்லா சத்ததிற்குள்
புதைக்காதே
அவை என் காதில்
ஈயத்தை ஊற்றிய
உணர்வை ஏற்படுத்துகிறது
காதலை பேசு
என் காதருகே
கூசும் வரை பேசு
குறைந்த பட்சம்
என்னை ஏசு

எழுதியவர் : kd (7-Aug-10, 11:32 am)
Tanglish : mounam ventaam
பார்வை : 924

மேலே