நகங்கள்
உன் வார்த்தையை
ஏன்
உதட்டிலேயே ஒட்டவைத்திருக்கிறாய்
உதிர்பதற்கு ஒரு யுகமா ?
உள்ளத்தில்
பூட்டி உறங்க
வைக்காதே
உயரத்தில்
வைத்து ஒதுக்கிவிடு
என்னிடம்
நம்பிக்கை
வளரும்
போது நகங்களாய்
நறுக்காதே
அதை விழுங்கவும்
செய்யாதே
உன்
இதயத்தை தாண்டி இறங்கும்
போது
என்னில் கீறல்கள்
ஏற்படுத்துகிறது
உன் நகங்கள்
விரல்களில்
இருந்தால்
கீரிடம் அணிந்த
தேவதைகளாய்
இருக்கிறது!