மனசு ரெண்டும் புதுசு

குமரி என்றாலும் உன் மனசு
குழந்தையை போல்தான்
நீ செய்யும் குறும்புகளை
நான் ரசித்து மகிழ்ச்சி
கொள்கிறேன்..!!

உன் விழி பேசாத மொழியேது
உன் பன்மொழி புலமையை
நினைத்து நான்
பெருமை கொள்கிறேன்...!!

உன் விழி சொல்லும் பாதை
எதுவென்று தெரியாமல்
என் மனமோ அடிக்கடி
தடம் மாறி தவிக்குது...!!

என் மனசை உன்னிடம்
பறிகொடுத்தேன்

நீயும் என்னை உன் மனதோடு
இணைத்துக்கொண்டாய்
நானும் உன்னை அன்போடு
அணைத்துக்கொண்டேன்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (21-Jan-22, 1:11 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 194

மேலே