அவள்

காலையில் பூக்கும் தாமரை நீதான்
மாலையின் குமுத மலரும் நீதான்
ஆதவன் தரும் இளங்காலை நீதான்
மயக்கும் மாலைப் பொழுதும் நீதான்
சந்திரனின் தண்ணொளியும் நீதான்
ஆடும் தோகை மயிலும் நீதான்
பாடும் சொல்லக் குயிலும் நீதான்
தில்லானா இசைக்கும் சிற்றருவியும் நீதான்
தென்றலுக்கு சதிராடும் நெற்கதிரும் நீதான்
இப்படி காணும் பொருளில் எல்லாம்
நீயே நீயே என்றிருக்க உன்னையல்லால்
நான் நாடுவதும் தேடுவதும் இத்தரணியில்
ஒன்றும் இல்லை அறிவாய் நீ என்னவளே
என்மனதை உனக்கு அள்ளித்தந்துவிட்டேன்
நீயே கதி இனிக்காலம் முழுவதும்
என்றிருக்கும் உன் காதலனடி நான்
இன்னும் என்ன சொல்லவேண்டும் தெரியலையே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (21-Jan-22, 10:45 am)
Tanglish : aval
பார்வை : 174

மேலே