காத்திடவே சட்டம்

கட்டளைக் கவித்துறை -
அந்தாதி கவிதை

அரசியல் சட்டமென் றொன்றை உருவாக் கிடக்கூடியே
அரசினை பாரதத் தின்னுள் கலைத்து ஒருங்கிணைத்து
பெரிய அரசாய் உருவாக் கிடவே அனைவருமே
விரும்பி படைத்ததே இந்திய ஆட்சியை போற்றுவோமே (க)

போற்றிடும் நம்மையும் காத்திட சட்டம் இயற்றியேயும்
ஏற்றமாய் காவல் துறையென ஒன்றையும் ஆக்கினரே
ஆற்றொனா துன்பம் இனிமேல் வராது எனச்சொல்லியே
மாற்றமும் செய்தனர் சட்ட வரைவின் பிரிவினிலே (உ)

பிரிவிலே மாற்றமும் செய்த பிறகு தொடர்சிக்கலே
பெரியதாய் தோன்றியே எங்கும் அமைதியை பொத்தலிட
அரிவாள் கரத்தினில் ஏந்திட காவலர் துப்பாக்கியால்
குருவியாய் மக்களை கொன்று குவித்து அடக்கினரே (ங)

அடங்கிய மக்களும் வீறுடன் தம்மினம் மேம்பாடினை
அடையவே சேர்ந்து இணைந்து அனைவரும் போராடிடும்
முடிவுடன் சென்றே அரசிடம் தம்மின எண்ணத்தையும்
தொடர்ந்து அளித்திட ஏற்கா அரசினால் ஏமந்தரே (ச)

ஏமாற் றமதுவும் கோபத் துடனே வெறுப்பையுமே
கோமே தமான மனிதர் பலருமே கொண்டனரே
கைமா றுதலாய் இதுபோல் அரசுகள் செய்ததாலே
மாமாங் கமான பழக்கமும் நீங்கிட சூழலாச்சே (ரு)
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (21-Jan-22, 7:27 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 38

மேலே