சுகமே சுகமென்று

வந்த வருடம் நம்மிடத்தில்
தந்து வாழ நலம்தனை
வரவேற்கும் எழில் கொண்டு
வாழ்த்துகின்றோம் இவ்வாண்டை ,
ஏர் கொண்டு போர் நீங்கி
அமைதியுடன்மனசெல்லாம்
சுகமே சுகமென்று நோயின்றி
வேற்றுமையின் வேரின்றி
சாதிமத சங்கடங்கள் தொலைத்து
உயர் எண்ணம் மனசெல்லாம்
நிறைந்திடவே மகிழ்ச்சியெனும்
பேருவகை பூத்திடவே,
புன்னகைகள் மலர்களென
மங்காத ஒளியில் மக்கள் வாழ
வாழ்த்தி நிற்கும் வருடமென
இனி வரும்ஆண்டெல்லாம்
இனிய ஆண்டாக வரவேற்கும்
ஆண்டாக அமைந்திட
நல்லாசி பெற வேண்டும் இவ்வாண்டு

எழுதியவர் : பாத்திமாமலர் (9-Jan-22, 1:14 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : sugame sugamentru
பார்வை : 63

மேலே