அரசியல் சிற்பியே

. அரசியல் சிற்பியே
. 📚📚📚📚📚📚📚📚
கடலில் மீனவன் கட்டிய வலையாய் - நீ
எழுதிய சட்டங்கள் இருந்தது அன்று...

ஆண்டுகள் எழுபதை கடந்து இன்னும்
அதிலே மீன்பிடித்தல் தவறான எண்ணம்...

ஊழல் இலஞ்சம் ஒவ்வொரு இழையாய்
அறுந்தும் கடலுக்குள் அதுஎன்ன வலையா ?

சுறாக்கள் கூட எளிதாய் தப்ப
இறால்கள் இங்கே எப்படிச் சிக்கும்

வெள்ளையனை விரட்டி விதிகளை வகுத்து
கொள்ளையன் கைகளில் கொடுத்தது முறையா ?

சொந்த வீட்டில் சோற்றைத் திருடும்
இந்த கும்பலை யார் வந்து தடுக்க...

ஏடுகள் எல்லாம் பழுத்தும் போச்சு
எழுத்துக்கள் எல்லாம் வெளுத்தும் போச்சு...

புழுதியைத் தட்டி என்னடா புண்ணியம்
எழுதனும் இன்றைக்கு அதுதான் திண்ணியம்...

பாட்டன் பூட்டிய வண்டியில் இன்னும்
பயணம் போவது பெரிய மடத்தனம்..

அடுத்தொரு அம்பேத்கர் பிறப்பது எப்போ
அரசியல்வாதியிடம் அப்பாவி தப்ப !

📒📗📘📙📓📔📕📖📗📘📙📑📒📕📖📗

எழுதியவர் : க.செல்வராசு (6-Dec-21, 6:18 pm)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : arasiyal sirpiyae
பார்வை : 74

மேலே