பெண்ணின் மனப்போராட்டம்

ஏழையாய் இருந்தாலும்..
ஏரோப்ளானிலே பறக்கும் வசதி இருந்தாலும்..
பெண்ணிற்கு உற்ற துணை இல்லையெனில்..
அவள் படும்பாடு அப்பப்பா...

ஆயிரம் ஆசை வார்த்தைகள் கூறிவிட்டு
இன்று நம்மை ஏமாற்றிவிட்டாரே
என்று கோவப்படுவதா? அல்லது
பிள்ளைகளின் நலனுக்காக
சகித்துக்கொண்டு வாழ்வதா?

பிறந்த வீட்டிற்கும் செல்ல முடியாமல்
புகுந்த வீட்டிலும் வாழ முடியாமல்
தவிக்கும் தவிப்பு நரகத்தை விடக்கொடியது...

வெளியே சிரித்து உள்ளே
அழுது புலம்பும் அவலநிலை...
என்று நம் வாழ்வில் வரும் விடியல்?
என்ற ஏக்கம் தான் மிச்சம்...😔😔

ஆயிரம் கனவுகளோடு நம் வாழ்வில்
அடியெடுத்து வைத்தவளை வைத்துத்
தாங்க வேண்டாம்..
பாதாளத்தில் தள்ளிவிடாமல் இருந்தால் போதும்...

ஆடம்பரமான வாழ்க்கையைத் தரவேண்டாம்..
அன்பான வாழ்வைத் தந்தால் போதும்...🙏

அவர்களைப் போற்ற வேண்டாம்..
அலட்சியப்படுத்தாமல் இருந்தால் போதும்..

அவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள்.. உற்சாகம் அளியுங்கள்..
உங்கள் வாழ்வு சிறக்கும்...👍👍

எழுதியவர் : புனிதா சரவணன் (27-Jan-22, 8:50 pm)
சேர்த்தது : புனிதா சரவணன்
பார்வை : 486

மேலே