அச்சமில்லை
அரவமாய் வஞ்சங்கள் வழிமறித்து
வான்முழுதும் நின்றாலும்
பாலை நில பஞ்சங்கள் படையெடுத்து
விழிமுனையில் சென்றாலும்
துன்பக் கரைபுரண்ட வெள்ளங்கள்
குடி அழிக்க வந்தாலும்
அறவழி அகிலம் கூட
வானிடிந்து வீழ்ந்தாலும்
நெருப்புக் கணைகள் எங்கள்
வலி மார்புகளைத் துளைத்தலும்
மனம் மருடமால் துணிந்தெழுந்து
காண கீதம் பhடுமே
உயிர் செத்தாலும் உதடிரெண்டும்
வாய்மை மொழிதான் பேசுமே
வலிபட்ட நெஞ்சுனுள்ளே
வான தீபம் எழுந்து சுடருமே
எரிமலை குழம்பு போல வீரம்
கொதித்தெழுந்து நிற்கவே
அகிலம் அச்சமில்லை அச்சமில்லை என்று
ஆனந்தமாய் ஆர்ப்பரிக்க கூடுமே