ஹுசைனுக்கு எழுதிய கவி
அழகான பெயர் தனிலும்,
அழகாய் அமைந்த பெயரதுவே!
ஏந்தலின் இதயம் கனிந்த
ஈரக்கொலையின் பெயரதுவே!
செதுக்க நினைத்த பெயரை,
செருக்காய் அமைந்த பெயரை,
வடிக்க வந்த பேணாவும்,
ஹுசைன் என்று தொடுத்து தந்தது!
பிறப்பால் வந்த உறவல்ல,
பிணைப்பால் வந்த உறவு!
நினைவில் நிற்கும் உறவாய்,
நிலைத்து இருக்கும் உறவு!
கவிதையொன்று தொடுக்க நினைத்தேன்,
காகிதத்தையும் துணைக்கு அழைத்தேன்!
தேடி வந்தது தமிழன்றோ,
தேனின் மொழியின் வடிவன்றோ!
நிழலாக உனை தொடரும்,
நிஜமானதே என் அன்பு!
நினைவுகள் அனைத்தும் சொல்லிவிடும்,
நீதானே என் தெம்பு!
உனக்காக நான் துடித்த நிமிடம்,
உணராமல் உதறிச் சென்றாய்...
உயிராய் உன்னை நினைக்கின்றேன்,
உணர்விலும் அதை உணர்கின்றேன்!
பிறர் மீது இல்லாத அன்பு,
பிரியாமல் வைத்திருக்கிறேன் என்னை நம்பு!
அண்ணணாய் இருக்கும் பந்தம்,
வார்த்தையில் வடிக்க முடியாத சொந்தம்!
கேலி கிண்டல் நீ செய்தால்,
போலி கோபம் நான் செய்வேன்...
வேலி தாண்டும் ஆடு என்றும்,
வெளிச்சம் குறைந்தால் வீடு தேடுமே!
உள்ளத்தின் வார்த்தைகள் சில,
உணர்வுகளால் சொல்கிறேன் மெல்ல,
முன்பு என்மீதிருந்த பாசம்,
மெல்ல குறைகிறது உந்தன் நேசம்!
கவியை முடிக்க நான் வரையில்,
காகிதத்துக்கும் புரிந்துவிட்டது என் அன்பு!
சொற்களில் அமைந்த தமிழெழுத்தும்,
அதை கூறும் கவிதையொன்று தொடுத்து தந்தது!

