முஜ்ஜம்மிலுக்கு எழுதிய கவிதை Kavithai to Muzzammil 1
இறை தந்த அருட்கொடையாம்,
ஏந்தலுக்கு வைத்த பெயர்,
இறை பேசும் மறையினிலும்,
மணமாய் அமைந்த பெயரதுவே!
ஏந்தல் மீது நான் கொண்ட பாசம்,
உன் பெயரிலும் எனக்கு அது வீசும்!
'முஜ்ஜம்மில்' என்று அழைத்ததுமே,
மனமும் எனது மலர்ந்திடுமே!
எவருக்கும் இல்லாத சிறப்பு, எனக்கெதற்கு
என்ற வினா நீ தொடுத்தால்,
பதிலை வடிக்கும் பேணாவும் - உந்தன்
கேள்வியை எண்ணி திகைக்கிறது!
நட்புக்கு எல்லையொன்று நீ வகுத்தால்,
என் அன்பால் அதையும் நான் கடப்பேனே!
எல்லோர் போலும் நீ எனக்கு என்றுரைத்து
இடியையும் பாய்ச்சினாய் என் செவிக்கு!
நெருங்கி பழகாதே என்றுரைத்து,
நெருப்பை என்னுள் வைத்திட்டாய்!
நட்பை மட்டுமே கேட்கின்றேன்,
நண்பனாய் உன்னுடன் நிற்கின்றேன்..
பிலால்..

