ஒரு பசுவும் மாட்டுக்காரனும்
மாட்டுக் காரன்
ரெண்டு நாளாய் ஜுரத்தில் வாட்டம்
அவன் மனைவி பசுவிற்கு புள்ள கொடுத்தாள்
புண்ணாக்கும் கரைத்து வைத்தாள்
பசு இதை எல்லாம் ஏற்கவில்லை
தண்ணீர் மட்டும் குடித்தது
பால் தந்தது.....ஆனால் அதன்
கண்கள் ஓரம் நீர் கசிந்தது
ஈனக் குரலில் 'அம்மா' அம்மா என்று கத்தியது
இப்போது புரிந்தது மாட்டுக்காரன் மனைவிக்கு
பசு தன் எஜமானைத் தேடுகிறது
அதன் கண்ணீரும் கதறலும் அவனைப்பற்றி
அதன் பாஷையில் குசலம் விசாரிக்கிறது....
உண்ணாவிரதம் செய்யும் பசு
மாட்டுக்காரன் நலம் கோரி...
வாயில்லா ஜீவனுக்கும் எல்லா
சலனங்களை உண்டு என்பதை அறிவோம்