புதுமை அறிவியல்

ஆதியில் இருந்தது ஆட்பொருள் ஒன்றே
அனைத்தும் பிறந்தது அதனில்தான் அன்றே
எத்தனை காலங்கள் கடந்திங்கு போயினும்
நிதமும் அழியா நிதர்சனம் இதுவே

அணுவை துளைத்து புதுமையை படைக்க
அண்டம் முழுதும் ஆர்வங்கள் சுரக்க
எல்லாம் அழிந்தும் இறுதியில் இருப்பது
கற்பனை வடிவான கடவுளின் துகளே

விண்ணியல் அருமை பாரெங்கும் வீச
வான்வீதியில் சென்று வளங்களை பேச
அன்று நிலவில் இருந்தாள் கற்பனை பாட்டி
இன்று நாமோ செல்கிறோம் வானுர்தியை பூட்டி

ஆயிரம் விந்தைகள் கொண்டது உலகம்
அறிவியல் இல்லாது அறிவது கடினம்
நானிலம் போற்றும் நான்மறை கூறும்
உயிரினத்தோற்றம் பரம்பொருள் முறையே

எழுதியவர் : பூபாலன் மு (28-Jan-22, 8:51 pm)
சேர்த்தது : பூபாலன் மு
Tanglish : puthumai ariviyal
பார்வை : 2846

மேலே