இன்று அஹிம்சை மறைந்த தினம்
புது வருடம் ஒவ்வொரு ஜனவரியிலும் பிறக்கிறது
ஒவ்வொரு ஜனவரியிலும் அஹிம்சை இறக்கிறது
புதிய வரும் வருடம் செயற்கை இன்பம் தருகிறது
ஜனவரி 30 அஹிம்சை குண்டு பாய்ந்து இறக்கிறது
காந்தியை தந்தையாக நாம் ஏற்க தேவையில்லை
ஆனால் உலகோ இவரை கடவுளாக போற்றுகிறது
காந்தி எவ்வளவு உயர்ந்த அருமை மனிதராயினும்
அவரும் மனிதனே நிறை குறை கொண்ட ஒருவரே
காந்திஜியின் சில ஏற்பாடுகளை பலர் ஏற்கவில்லை
அதனால் சில கலவரங்கள் ஏற்பட்டு பலர் இறந்தனர்
இவை ஒரு கொந்தளிப்பான சூழ்நிலையில் நடந்தது
அப்போது வாழ்ந்த மக்கள் இதற்கு தார்மீக பொறுப்பு
சுதந்திரம் வாங்கும் வரை மஹாத்மாவை ஆதரித்து
பின்னர் கொண்ட மன கசப்பால் மனம் கொந்தளித்து
பேச்சுவார்த்தை மூலம் சமரசம் காண தவறிவிட்ட்டு
சதிசெய்து பகிங்கிரமாக காந்திஜியை கொன்றுவிட்டு
பாரத கலாச்சாரம் பண்புகளை அவருடன் தீயிலிட்டு
இன்று நம் நாட்டின் தேசத்தந்தை என்று குறிப்பிட்டு
அக்டோபர் 2 ஒரு நாள் அவரது சிலையை கும்பிட்டு
அஹிம்சை கொள்கையை உதாசீனம் செய்துவிட்டு
இன்று நாம் என்ன முன்னேற்றம் தான் கண்டோம்?
கோடிக்கணக்கில் வறுமையில் உழலும் ஏழைகள்
பெண் இனத்தின் மீது இழைக்கப்படும் வன்மைகள்
வெளிநாடுகள் தான் சொர்கம் போன்ற மயக்கங்கள்
லஞ்சம் ஊழல் வாழ்க்கை பாகமாகிவிட்ட கேவலம்
பொருள் அற்றவர் வாழ்வில் காணும் அலங்கோலம்
பண்புகள் செல்போனிலிருந்து வெளியேறும் வேகம்
என்று தான் தணியும் நம் மக்களின் வேட்கை தாகம்?
ஆனந்த ராம்