நான் எனும் நிலை
உடலது என்ன பாவம் செய்ததோ
உயிரது செய்த பாவம் என்னவோ
மனமது நினைத்த பாவம் எதுவோ
பொதுவில் துன்பம் வாழ்வில் ஏனோ
உடலது இயங்கிட மனமே ஓட்டுனன்
மனமது இயங்கிட அறிவே இயக்குனன்
உடலில் நோவெனில் மனமும் அறிவும்
மங்கியே இருந்திடும் தேமென சோர்ந்தே
உயிருமே மனமுமே அறிவுமே அலறுமோ
உடலது வலியால் அல்லுறும் போதினில்
நெருப்பு ஆயுதம் குண்டால் சிதையயில்
தடுக்குமோ அவைகளும் விரைந்து உடலை
உடலே வாகனம் உயிருக்கும் அறிவுக்கும்
மனமே எழுப்பிடும் உடலை சோர்வகல
எதற்கும் காரணம் மனமும் அறிவுமே
குதர்க்கம் செய்திடும் அறிவது தெளிந்தாலே
அந்தியில் உடலது பிணமென கிடக்கும்
உயிரது மனமது அறிவது விலகிடும்
ஆற்றலாய் இவைகள் ஓடிடும் காற்றோடு
முடிவில் நாமென இருந்தது எவையோ.
---- நன்னாடன்