கம்பிகளை உடைக்கும் கம்பனாக வேண்டும்
நான் வெடிக்கும் நிலையில்
ஓர் பூகம்பம்...!
என்னுள் அடங்கிக்கிடக்கும்
ஏக்கங்கள் புழுங்கிச்சாகின்றன.
என் பேனா நகரும் போதெல்லாம்....
என் கண்கள் பார்க்கும் போதெல்லாம்...
என் நாக்கு அசையும் போதெல்லாம்...
அங்கெல்லாம்
புரட்சிகள் வெடிக்க வேண்டும்.
புதுமைகள் மலர வேண்டும்.
யாரோ பாடினானாம்
" விழிகள் நட்சத்திரங்களை வருடினாலும்
விரல்களென்னவோ ஜன்னல் கம்பிகளோடுதானென்று.
நான் கம்பிகளை உடைக்கும் கம்பனாக வேண்டும்.
ஆம் வெறும்...அற்ப
சாதி...சமயம், சம்பிரதாயம்....சடங்குகள்
என்கின்ற இச்சமூகத்தின்
" கான்க்ரீட்"
கம்பிகளை உடைக்கும் கம்பனாக வேண்டும்.