வெற்றிடம்

நாலுபக்கம் சுவரெழுப்பி
வாசக்கால் ஜன்னல் வைத்து
வீடொன்றை கட்டினாலும் நாம்
வாழ்வதென்னவோ வெற்றிடத்தில்தான்.

வெறும் மண்ணை பிசைந்து
அழகாய் தட்டி தட்டி
அதை பானையாய் செய்தாலும் நாம்
உபயோகிப்பதென்னவோ அதன் வெற்றிடத்தைத்தான்.

பரந்த இவ்வுலகில்
காடு...மலை, மேடு...பள்ளம்,
செடி...கொடி, என்றெல்லாம் போக நாம்
உலாவுவதென்னவோ அதன் வெற்றிடத்தில்தான்.

கர்பத்திலும் வெற்றிடம்தான்
கல்லறையிலும் வெற்றிடம்தான்.
வந்ததும் வெற்றிடம்தான்...
போவதும் வெற்றிடம்தான்.

வெற்றிடத்தில் தேடித் தேடி
வெட்ட வெளியில் நின்றபின்தான்
வெற்றிடம்தான் இறையென்று
வெட்ட வெளிச்சமாய்த் தெரிந்ததுவே!

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (2-Feb-22, 5:22 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : vetridam
பார்வை : 214

மேலே