மடு - குளம் - ஏரி இவைகளிலுள்ள மீன்கறி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

ஓதுமடு மீனால் உலவைபித் தங்களறுந்
தாதுமே கங்கபமந் தங்களுண்டாங் – கோதி(ல்)குளம்
ஆருமீன் றன்னால் அழற்பிணிமந் தந்தீரும்
ஏரிமீன் மேகமடும் எண்

- பதார்த்த குண சிந்தாமணி

மடுமீன் வாயுவையும் பித்தத்தையும் போக்கும்; சுக்கிலம், பிரமேகம், சிலேட்டுமம், அக்கினி மாந்தம் இவற்றை உண்டாக்கும்; குளத்து மீன் உண்டால் சுரம், அழற்பிணி, மந்தம் நீங்கும்; ஏரி மீனால்
பிரமேகம் நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Feb-22, 3:02 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

மேலே