மதசார்பற்ற இந்தியா🤔

என்ன நாடு? என்ன மத்திய அரசு? என்ன மாநில அரசு? என்ன நிர்வாகம்? தொடர்ந்து பல நெருக்கடிகளை குறிப்பிட்ட மதம் சார்ந்து இருப்பதால் அனுபவித்து வரும் என் சகோதர சகோதரிகளை காணும் போது நெஞ்சில் ஒரு நெருப்பு பற்றி எரிகிறது. இந்தியா நாட்டின் இறையாண்மை எங்கே? சமய நல்லிணக்க எங்கே? சமூகநீதி எங்கே? என ஆயிரம் கேள்விகள் முளைக்கிறது. இறைவன் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு ஏன் சகா வரம் தரவில்லை? ஏன் எடுத்துக் கொண்டான்? இருந்திருந்தால் இந்த சமூக அவலங்களை கண்டு இருப்பார். இப்படி பார்த்து பார்த்து சட்டம் இயற்றியும் இன்றுவரை சிறுபான்மையினர் அனுபவித்து வரும் தொல்லைகள் கொஞ்சம் நெஞ்சம் இல்லை. இனி ஒவ்வொரு வரும் அம்பேத்கர் ஆக மாறினால் மட்டுமே இந்திய மக்களை பாசிச பரதேசிகளிடமிருந்து பாதுகாக்க முடியும். ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு மதம் சார்ந்த மக்களும் யாருக்கோ என்று இல்லாமல் தன் சக மனிதனுக்கு நடக்கும் பிரச்சினை என்று நினைத்து இந்த அவலங்களை களைய முன் வர வேண்டும். நாளைக்கு போட்டு வைப்பதும், சிலுவை அணிவதும் , டர்பன் அணிவதும் குற்றம் என்பார்கள். அப்படி நடக்கையில் கண்டிப்பாக ஒவ்வொரு இசுலாமியனும் களத்தில் இருப்பான் இன்று அவனுக்காக யாரும் முன் வராதது ஆச்சரியம் தான்?
இதுபோன்ற சம்பவங்களை காணும் போது தெரிகிறது தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் என்ன செய்தது என்று.
திருமறை குர்ஆன்:
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”
(அல்குர்ஆன் 109: 6)
“தனக்கு விரும்புவதைத் தன் சகோதரனுக்கும் விரும்பாத வரை ஒருவன் முஸ்லிம் ஆகமாட்டான்.” (நபிமொழி, நூல்: முஸ்னத் அஹ்மத்)
ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.
யோவான் 15:13
“அன்பும் சிவனும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பும் சிவமும் ஒன்றென்று அறிந்தபின்
அன்பேசிவமாய் அமர்ந்து இருந்தாரே”
-இந்து சமயம்-
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும். குறள்:388
விளக்கம்: நீதிவழங்கி மக்களைக் காக்கும் அரசு மக்களைக் காக்கும் கடவுள் என்று கருதப்படும்.
சிக்கந்தர் முகம்மது இக்பால்

எழுதியவர் : சிக்கந்தர் (6-Feb-22, 1:58 pm)
சேர்த்தது : Sikkandar
பார்வை : 141

சிறந்த கட்டுரைகள்

மேலே