மகிழ்ச்சியின் தேடலில் மர்மம் அத்தியாயம் 3

அத்தியாயம்: 3

சிக்கந்தர்: ஐயோ ஐயோ போச்சு அப்படினு சிக்கந்தர்க்கு உள்ள ஒரே பீதி...
நசிமா: அது வந்து அங்கிள்..........
SP: அங்கிள்கிட்ட உனக்கு என்ன தயக்கம். அப்போவே கேட்டேன் உன் வீட்டுக்காரன் ஏதும் பிரச்சனை பண்றானா?
நசிமா: அப்படில ஒன்னும் இல்ல அங்கிள். உங்களையும் ஆன்டியையும் பாத்து ரொம்ப நாள் ஆச்சு அதான் பாக்கலாம்னு.
SP: அம்மா நீ இப்படிலாம் போன் ல கேட்ட சொல்லமாட்ட. எங்களை பாக்கணும்னா நீ நேர வீட்டுக்கு வந்து இருப்ப இப்படி போன் பண்ணி இருக்கமாட்ட. சரி உங்க ஆன்டி உன்னையும் இனாயா பாப்பாவையும் பாக்கணும்னு சொல்லிட்டு இருக்க. உங்க டாடி போன் பண்ணாரு இங்க தான் இருக்காங்க போல.
நசீமா: ஆமா அங்கிள். நேத்து தான் வந்தாங்க.
SP:: சரி அப்போ நான் சாயங்காலம் வீட்டுக்கு வரேன் எல்லாத்தையும் ஒரே இடத்துல பாக்கலாம்.
நசீமா: சரி அங்கிள். அவங்க பேசுறாங்க.
SP: சொல்லுயா வேற என்ன விஷயம். என்னயா பண்ண என் பொண்ண.
சிக்கந்தர்: சார் நான் என்ன பண்ண போறேன். வேற விஷயம் ஒன்னும் இல்ல சார். லீவு கேட்ருந்தேன் என்ன சார் ஆச்சு?
SP: என்ன விளையாடுறியா நீ. அதான் சொன்னேன்ல தேர்தல் நேரம். இப்போ முடியாதுனு. அப்பறம் அந்த காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் கேஸ் ரொம்ப பதட்டம் ஆகிட்டு இருக்கு உனக்கு தான் தரலாம்னு இருக்கேன். சரி நான் வீட்டுக்கு வரேன் பேசிக்கலாம். நான் வைக்கிறேன்.
சிக்கந்தர்&நசீமா: சரிங்க அங்கிள் , சரி சார்.
நசீமா: இன்னும் கோவம் குறைந்தது. மனசுக்குள் பேசிக்கொண்டாள். ஓஹ் நம்ம தான் லூசு மாதிரி இவளோ ஆர்ப்பாட்டம் பண்ணிட்டோம். இவரு லீவு கேட்டுருப்பாரு போல.
சிக்கந்தர்: என்ன பாப்பா என்ன யோசனை. நீ பண்ணது தப்புனு தோணுதா அப்படி கேட்க
நசீமா: மனதுக்குள்( ஆஹா ஆமா அப்படினு சொன்ன ரொம்ப ஓவரா பேசுவாரு) அமைதியா இருக்க வேண்டியது தான்.
சிக்கந்தர்: விடு பாப்பா. எதுக்கு இதே திருப்பி திருப்பி பேசிட்டு. வெயில் அதிகமா இருக்கு ஜூஸ் குடிக்கிறயா? இன்னிக்கு ஹாஸ்பிடல் டூட்டி எப்படி போச்சு?
நசீமா: 1 நிமிடம் மௌனம். (சரி அவரே normal ஆயிட்டாரு நம்மளும் normal ஆகிற வேண்டியது தான்) எப்பவும் போல தான் பாப்பா. OP அதிகம். ஆபரேஷன் ஒன்னும் இல்ல. இப்போ எதுக்கு பாப்பா ஜூஸ் எல்லாம் வீட்டுக்கு தான போறோம். வேண்டாம் விடுங்க. அம்முக்குட்டி(இனாயா) அழுகிற அபப்டினு மாமி போன் பண்ணாங்க அப்போவே.
சிக்கந்தர்: (மனதுக்குள் அப்பாடா செல்லம் normal ஆயிட்டா) சரி பாப்பா வீட்டுக்கே போய்டாலாம்.
10 நிமிடம் கழிந்தது வீட்டுக்கு வாசலில் கார் நின்றது.
பசீர் மாமா:: (சிக்கந்தர் மாமனார்) அங்க பாரு அங்க பாரு அம்மா அத்தா வந்துட்டாங்க. என்று இனாயா கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தார்.
சிக்கந்தர்: என்ன மாமா வெளியே நிக்கிறிங்க?
பசீர் மாமா:: வாங்க மாப்ள. வா மா. ஆமா மாப்ள ஒரே சேட்டை அதான் ரஹீமா சொல்லுச்சு (சிக்கந்தர் அம்மா) அண்ணே அவங்க அம்மா அத்தாக்கு போன் பண்ணிட்டேன் இப்போ வந்துருவாங்க 10 நிமிசத்துல நீங்க இவளை அப்படியே வேடிக்கை காட்டிட்டே இருங்க சொல்லுச்சு.
நசீமா: அம்முக்குட்டி அம்மாகிட்ட வாங்க வாங்க.
இனாயா: புன்முறுவல் செய்துட்டு அம்மாகிட்ட ஒரே தாவலில் போய்ட்டா.
சிக்கந்தர்: மாமா சாப்பிட்டீங்களா.
நசீமா: ஆமா அத்தா சாப்பிட்டீங்களா. மறந்துட்டேன் கேட்க.
பசீர் மாமா: நான் சாப்பிட்டான் நீங்க ரெண்டு பேரும் மேல போய்ட்டு நல்ல சாப்புடுங்க நான் கொஞ்சம் வெளிய போய்ட்டு வந்திறேன்.

ஹாலில் சிக்கந்தர் அம்மா (ரஹீமா), நசீமா அம்மா (ஆமினா) நசீமா தங்கச்சி (நிஷா) அமர்ந்து பேசிட்டு இருக்காங்க. சிக்கந்தர்க்கு இரண்டு அண்ணன்கள் இருவரும் குடும்பத்தோடு மதுரை மற்றும் திருச்சில் ) வசிக்கிறார்கள் இருவருக்கும் பிசினஸ்.

நசீமா மற்றும் சிக்கந்தர் உள்ளே நுழைகிறார்கள்.

வாங்க மாப்பிளை , வாங்க மச்சான், வாடா, வாமா நசீமா.

ரஹீமா: புள்ளைய நீ குடு இங்க ரெண்டு பேரும் கைகால் கழுவிட்டு வாங்க. ஆமினா நீ புள்ளைய வாங்கிக்க. நிஷா நீ மாமியோட வா நம்ம சாப்பாடு எடுத்து வைப்போம்.
ஆமினா: மச்சி நீங்க உக்காருங்க நான் எடுத்து வைக்கிறேன் நீங்க புள்ளைய வச்சுக்கங்க. நிஷா வா மாமி உக்கரட்டும்.
நிஷா: சரி மா. மாமி நீங்க உக்காருங்க.
சிக்கந்தர் நசீமா மற்றும் அனைவரும் சாப்பிட்டு முடிக்கிறார்கள் மணி சரியாய் 3 .௩௦ மாலை.
கிரிங் கிரிங் கிரிங் கிரிங் நசீமா போன் அலறுகிறது
மறுமுனையில்
SP மனைவி திருமதி சகுந்தலா : ஹலோ நசீமா நாங்க கிளம்பிட்டோம். இன்னும் அரை மணி நேரத்துல வந்துடுவோம்.
நசீமா: சரிங்க ஆண்ட்டி. வாங்க உங்கள தான் எதிர்ப்பாத்துட்டு இருக்கோம்.
ரஹீமா: யாரு? நசீமா.
நசீமா: சகுந்தலா ஆண்ட்டி மாமி. உங்கள பாக்கணும்னு சொன்னாங்க.
ரஹீமா: ஓ அப்படியா வரட்டும். ரொம்ப நாள் ஆச்சு. அம்மா வந்துருக்காங்க சொன்னியா .
நசீமா: நான் சொல்லல மாமி. அத்தா அங்கிள்க்கு கால் பண்ணி இருப்பாங்க போல.
ரஹீமா : நல்லது எல்லாத்தையும் இங்கேயே பாத்துப்பாங்க பாவம். எப்படி தஞ்சாவூர் போக முடியும் அவங்க.

ஒருமணி நேரம் கடக்கிறது அனைவரும் ஒரு சிறு உறக்கம் எடுத்துவிட்டு அவர்களுக்காக இரவு உணவு மற்றும் மாலை பலகாரங்கள் செய்வதில் மும்முரமாக இருக்கிறார்கள். சிக்கந்தர் தன மகளை கையில் வைத்தபடி மாமனாருடன் பேசிக்கொண்டு இருக்கிறார்.

காலிங் பெல்லின் ஓசை கிர் கிர் கிர்
சிக்கந்தர்: நசீமா, அம்மா வந்துட்டாங்க போல எங்க இருக்கீங்க எல்லாம்.
ரஹீமா மற்றும் நசீமா:வரோம் வரோம். ஏன் கத்துறிங்க.
எல்லாரும் வாசலில் நிற்க சிக்கந்தர் கதவை திறக்கிறான். அனைவரும் வாங்க வாங்க என்று ஒரே குரல் அழைக்க. அவர்களை வரவேற்க்கும் சாயலில் இனாயா தான் பங்கிற்க்கு ஒரு சிணுங்கல்.

SP : வந்த உடன் என்ன பஷீர் எப்படி இருக்க? என்னமா ஆமினா? எப்படி இருக்க எப்போ வந்திங்க நம்ம வீட்டுக்கு வழியே தெரியாது போல நேரா உங்க அண்ணி வீட்டுக்கு தானா?
மாமா மற்றும் மாமி சிரித்துவிட்டு அப்படில ஒன்னும் இல்லை அண்ணா . நம்ம வீட்டுக்கு வராம எங்க போக போறோம். அண்ணி கூட நேத்து சொல்லிட்டு தான் இருந்தாங்க போலாம்னு.
SP : ரஹீமா என்னமா நீ எப்படி இருக்க?
ரஹீமா: நான் நல்ல இருக்கேன் அண்ணே.நீங்க எப்படி இருக்கீங்க சகுந்தலா அண்ணி நீங்க எப்படி இருக்கீங்க என்ன பேசவே மற்றிங்க.
சகுந்தலா: என்ன உங்க அண்ணா பேச விட்டா தானா. உங்க பாசமலர் பொழிஞ்சுட்டு இருந்திங்க அதன் நான் அமைதியா இருந்தேன்.
ஒரே சிரிப்பு அலை ரஹீமா மற்றும் ஆமினா ஒரே குரலில் அன்னிக்கு இன்னும் இந்த நக்கல் மட்டும் போகல.
சகுந்தலா: எப்படி போகும் உங்க அண்ணனை கல்யாணம் பண்ணி இருக்கேன்.
காபி பலங்காரம் பரிமாறபடுகிறது. அவர்களும் இனாயாவிற்கு வாங்கிய துணிகள் மற்றும் பொம்மைகளை குடுத்துவிட்டு சற்று நேரம் விளையாடிவிட்டு SP ஆரம்பித்தார் ...

SP : உங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனை?
அனைவரும் குழப்பத்தில் முழிக்க சிக்கந்தர் மற்றும் நசீமா ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்
ரஹீமா: என்ன அண்ணா என்ன பிரச்சனை எங்களுக்கு ஒன்னும் புரியலே.
SP : காலையில் கால் வந்ததை சொல்லி கொண்டு இருக்கும் போதே
அய்யா அப்படினு கூப்புட்டுக்கிட்டே பெருமாள் உள்ளே வர.
சிக்கந்தர் நசீமா இருவருக்கும் ஷாக்.
பெருமாள்: நசீமா அம்மா இந்தாங்க வண்டி சாவி. அப்படினு நீட்ட.
ரஹீமா: என்ன நசீமா எங்க ஸ்டேஷன் போனியா நீ ? எதுக்கு?
நசீமா: ஆமா மாமி அது வந்து.....
சிக்கந்தர்: ஒன்னும் இல்லாம சும்மா தான் பாக்க வந்தா.
SP : என்ன ரெண்டு பெரும் மாறி மாரி பொய் சொல்றிங்களா? பெருமாள் என்ன நடந்தது காலைல.
பெருமாள்: அய்யா அப்படினு சிக்கந்தரை பார்த்தார்.
SP : அங்க என்ன பார்வை சொல்லுய்யா என அதட்ட.
பெருமாள் காலையில் நடந்த எல்லாத்தையும் ஒருவரி விடமா சொல்ல அனைவருக்கும் ஒரேய சிரிப்பு..
SP : மனதுக்குள் அய்யய்யோ இது தெரியாம நம்ம இங்க வந்து மாட்டிகிட்டோம். இப்போ எல்லா கோவத்தையும் நம்ம மேல திருப்பி இருப்பங்களே என்று நினைத்து கொண்டு. ஏன்மா நசீமா இதெல்லாம் ஒரு விஷயமா. நீங்க ரெண்டு பெரும் இன்னும் மாறவே மாட்டிங்களா. இன்னும் சின்ன புள்ளைல இருந்த மாதிரியே இருக்கீங்க என அதட்டினார். அதற்கிடையில் பெருமாள் அய்யா நான் கிளம்புறேன் என்று சொல்லி புறப்பட்டுவிட்டார்.
சிக்கந்தர்: அண்ணே இருங்க நானும் வரேன் என மெதுவா கிளம்ப முயற்சி பண்ண
SP : என்னது நீ கிளம்புறியா எதுக்கு இங்க உக்காந்து இருக்கிறேன். பெருமாள் நீங்க கிளம்புங்க.
நசீமா: அங்கிள் இப்போ உங்க மேல தான் எனக்கு செம்ம கோவம்......

தொடரும்.......

எழுதியவர் : சிக்கந்தர் (6-Feb-22, 4:57 pm)
சேர்த்தது : Sikkandar
பார்வை : 64

மேலே