மகிழ்ச்சியின் தேடலில் மர்மம் அத்தியாயம் 4

அத்தியாயம் 4
SP : என்னது நீ கிளம்புறியா? பெருமாள் நீங்க கிளம்புங்க. எதுக்கு நான் இங்க உக்காந்து இருக்கிறேன். உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பு அக்கறை எதுமே இல்லை. ஏன் எப்போ பாத்தாலும் நசீமா கூட பிரச்சனை உனக்கு அப்படி என்ன பிரச்சனை? கொஞ்சம் கூட அறிவு உள்ள பையன் மாதிரியோ அல்லது புத்திசாலி போலீஸ்கரன் மாதிரி என்னைக்கி நடந்துக்க போற என லெப்ட் ரைட் வாங்கி கொண்டுயிருந்தார். இடையில் SP சிக்கந்தரை பார்த்து கண் அடித்தார் யாரும் கவனிக்கவில்லை.
சிக்கந்தர்: எல்லாத்தையும் பொறுமையா விட்டதை பார்த்து கேட்டுகிட்டே மனுசுக்குள் சிரிச்சு கொண்டுயிருந்தார் அதற்க்கு காரணம் காலையில் நடந்த விஷயம் தான். அந்த நிகழ்ச்சி மெல்ல ஒரு படம் போல் அவர் மூலையில் ஓடியது. நசீமா வெளியே போன பிறகு சிக்கந்தர் உடனடியாக SPக்கு தான் போன் செய்வாள் என்று சிக்கந்தர்க்கு நல்ல தெரியும் அதனால் இவர் முந்திக்கொண்டு SP க்கு போன் செய்து நடந்த விபரங்கள் அனைத்தையும் கூறி நசீமா போன் பண்ணா எடுக்க வேண்டாம் என்று சொல்லி தன்னை காப்பற்ற வேண்டும் என்று கெஞ்சியிருந்தான். அதற்க்கு SP நீ அவளை இங்க வராம வீட்டுக்கு கூட்டிப்போ நான் போன் எடுக்கல நான் வீட்டுக்கு வந்து உன்ன திட்டுற மாறி திட்டுறேன் அப்போ தான் அவ நார்மல் ஆவா. உன்ன யாரு அவா முன்னாடி திட்டினாலும் அவளுக்கு கோவம் வரும் அப்பறம் உன்னோட பிரச்சனை முடுஞ்சுரும். அவ உன்கிட்ட சமாதானம் ஆய்டுவா. இதான் அந்த ஐடியா. SP : என்ன நீ மேல பாத்துகிட்டு இருக்க பதில் சொல்லுய்யா?
நசீமா: பொறுமை இழந்த நசீமா. அங்கிள் போதும் நிறுத்துங்க. இப்போ எதுக்கு இப்படி திட்டிட்டு இருக்கீங்க. லீவு கொடுக்காதது நீங்க அவர் என்ன பண்ணுவாரு பாவம். இப்போ உங்க மேல தான் எனக்கு செம்ம கோவம்....
இதை எதிர்பார்த்து காத்துக்கொண்டுயிருந்த SP
SP : என்னமா நசீமா திடிர்னு என் பக்கம் திருப்பிட்ட?
நசீமா: பின்ன என்ன அங்கிள் நீங்க லீவு குடுத்த என்ன வெளிய கூட்டி போகமாட்டேன் அப்படினா சொல்ல போறாங்க. இது வரைக்கும் நான் ஆசைப்பட்டதை அவங்க செய்யமாட்டான்னு சொன்னதே இல்லை. நீங்க எல்லாத்துக்கும் காரணம் அப்படினு சொல்லி செல்லமா கோவிச்சுக்கிட்ட. சகுந்தலா: நான் தான் சொன்னேன்ல அவ உங்க கிட்ட திருப்பிடுவானு. எல்லாரும் ஒரேய சிரிப்பு
ரஹீமா: அண்ணே எத்தனை தடவை இந்த மாதிரி நடந்தாலும் நீங்க மாறவே மாட்டீங்க. இவங்களுக்கு பஞ்சாயத்து பண்ணா நம்ம தான் மண்டை குழம்பி நிக்கணும்.
SP : என்னமா பண்ண சொல்ற பாசம் கண்ணா மறைக்கிது. சரி நசீமா உனக்காக உங்க வீட்டுக்காரரை 3 நாள் லீவு எடுத்துக்க சொல்லு. ஒருநாள் சேர்த்தே தரேன்.போதுமா இப்போ ஹாப்பியா?
நசீமா: முகத்தில் 1000 வாட்ஸ் பல்ப். அங்கிள் நல்ல சாப்புடுங்க. இந்தாங்க வடை வைக்கவா?
SP : இவளோ நேரம் அங்கிள் ப்ளட்ல வடை இல்லாதது உனக்கு தெரில? அவனுக்கு லீவு குடுத்த தான் தெரியுதா. நல்ல பொண்ணுமா நீ.
நசீமா: அப்படில ஒன்னும் இல்லை அங்கிள் பேசிட்டு இருந்திங்க அதான். SP : நல்ல சமாளிக்கிற நீ. சரி நாங்க கிளம்புறோம். சகு எந்திரி போகலாம். ரஹீமா: என்னது கிளம்புறீங்களா? நல்ல வேலைய கெடுதிங்க? நைட் சாப்பாடு ரெடி பண்ண எல்லாம் வாங்கி வச்சாச்சு.
ஆமினா: அண்ணே என்னைக்காவது தான் இப்படி சான்ஸ் கிடைக்கும் எல்லாம் ஒண்ணா உக்காந்து பேச இருங்க.
பஷீர். இருங்க மச்சான் பேசிட்டு இருக்கலாம். சாப்பிட்டு போலாம்.
SP: இல்லை இருக்கட்டும்.இன்னொரு நாளைக்கு வரேன்.
நசீமா: என்ன அங்கிள் என் மேல கோவமா? சாரி? எனக்காக இருக்கமாட்டீங்களா ப்ளீஸ்.
SP: க்கு மனது கேக்கல சரி நீ சொன்ன என்னைக்கு நான் தட்டி இருக்கேன். உன் மேல எனக்கு எப்போ கோவம் வந்துருக்கு.
சகுந்தலா: அதனா பாத்தேன் நசீமா சொல்லி இருக்கமா போவாரா. நல்ல கேட்ட நசீமா கோவமான்னு எங்க மேல கூட கோவம் வரும் உன் மேல அதுக்கு வாய்ப்பே இல்லை.
சிக்கந்தர்: சார் நானும் நசீமா கொஞ்சம் வெளியே போய் கொஞ்சம் பார்ச்சஸ் பண்ணிட்டு வரோம். நீங்க லீவு தருவீங்கன்னு எதிர்பாக்கல. அதன் நான் ஏதும் ஏற்பாடு பண்ணல? anyway தேங்க்ஸ் சார்.
SP: தேங்க்ஸ் எல்லாம் உன் மனைவிட்ட சொல்லுய்யா அவ தான காரணம். ஆமா என்ன பிளான் எங்க போறீங்க லீவுல.
சிக்கந்தர்: ஒன்னும் இல்லை சார் நியூயர் நைட் அவுட்டிங் கூட்டி போங்கன்னு ரொம்ப நாலா சொல்ற. போக முடில அதான் நைட் நியூயர் fire ஒர்க்ஸ் பாத்துட்டு. சிறுமலை போயிட்டு வரலாம்னு தான் ரொம்ப வருஷ பிளான்.
SP: ஒ அப்படியா. சரி சரி நீங்க ஷாப்பிங் முடுச்சுட்டு வாங்க. நாங்க பேசிட்டு இருக்கோம்.
நிஷா: அங்கிள் நசீமா மச்சானை பேசுனா அப்படியே மாத்தி பேசுவானு உங்களுக்கு தெரிஞ்சும் எப்படி வந்து அவள்ட மாற்றிங்க. இவங்க புருஷன் பொண்டாட்டி அளப்பறைக்கு அளவே இல்லை. கொடுமை...
என்று சொல்ல அனைவரும் சிரித்துவிட்டனர்...


SP : நீ வேற இதைவிட பெருசா எனக்கு பல்பு குடுத்து இருக்க உங்க அக்கா. ஒரு நாள்..

தொடரும்...

எழுதியவர் : தமிழ் அன்பு நேசன் (7-Feb-22, 8:34 pm)
சேர்த்தது : Sikkandar
பார்வை : 89

மேலே