என்னவோ எண்ணங்கள்

பித்தமது தலைக்கு போனால்
மொத்த உடலும் ஆடுதடா
சித்தம் அது கலங்கிப் போனால்
பைத்தியமாய் ஆகுதடா

சேர்த்த பணம் எதுவானாலும்
காகிதமாய் தெரியுதடா
மனைவி பிள்ளை யார் என்றாலும்
மாயமென தெரியுதடா

சொத்து வீடு எதுவென்றாலும்
சோகத்தையே தருகுதடா
சொந்த பந்தத்தைப் பார்க்கும்போது
உடல் முழுதும் எரியுதடா

வயிறது பசிக்கும் போது
உயிரின் உணர்வு தெரியுதடா
கொள்ளும்வரை உண்ண போது
கொல்லும் எண்ணம் தோன்றுதடா

நயவஞ்சகம் தோன்றுதடா
நல்ல உள்ளம் மாறுதடா
வெல்லமான மனதுக்குள்ளே
கள்ள எண்ணம் தோன்றுதடா

சுற்றத்தார் பேசும் பேச்சு
கற்ற வித்தையை மாற்றுதடா
காலனை அழைக்கும் வண்ணம் - மனம்
கடுமையாக மாறுதடா
- - - - - நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (7-Feb-22, 6:22 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : ennavo ennangal
பார்வை : 65

மேலே